< Back
நாடாளுமன்ற தேர்தல்-2024
நாடாளுமன்ற தேர்தல்-2024
கர்நாடகாவில் மத்திய மந்திரி அமித்ஷா இன்று பிரசாரம்
|1 May 2024 6:53 AM IST
கர்நாடகாவில் மத்திய மந்திரி அமித்ஷா இன்று தேர்தல் பிரசாரம் செய்கிறார்.
பெங்களூரு,
கர்நாடகத்தில் 2-வது கட்ட நாடாளுமன்ற தேர்தல் 14 தொகுதிகளில் வருகிற 7-ந் தேதி நடக்கிறது. இதையொட்டி தலைவர்கள் தீவிர பிரசாரம் செய்து வருகிறார்கள். கொளுத்தும் கோடை வெயிலையும் பொருட்படுத்தாமல் தலைவர்கள் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் உள்துறை மந்திரி அமித்ஷா இன்று (புதன்கிழமை) கர்நாடகத்தில் பிரசாரம் செய்கிறார். தனி விமானம் மூலம் மத்திய பிரதேசத்தில் இருந்து உப்பள்ளிக்கு அமித்ஷா வருகிறார். அங்கிருந்து அவர் ஹாவேரி தொகுதிக்கு உட்பட்ட ராணிபென்னூருக்கு சென்று பிரசாரம் செய்ய உள்ளார்.
அதை முடித்துக் கொண்டு அவர் தார்வார் தொகுதிக்கு வந்து பா.ஜனதா வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டுகிறார். பிறகு இரவு 7 மணியளவில் அவர் தனி விமானம் மூலம் ஐதராபாத்துக்கு புறப்பட்டு செல்கிறார். அமித்ஷா வருகையையொட்டி போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.