< Back
நாடாளுமன்ற தேர்தல்-2024
நாடாளுமன்ற தேர்தல்-2024
ஜனநாயக கடமை ஆற்றிய அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன்
|19 April 2024 4:44 PM IST
வாக்குப்பதிவு தொடங்கியது முதலே மக்கள் ஆர்வத்துடன் வந்து தங்களது வாக்கினை பதிவு செய்து வருகின்றனர்.
சென்னை,
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளில் நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு காலை 7 மணி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. வாக்குப்பதிவு தொடங்கியது முதலே அரசியல் கட்சி தலைவர்கள், திரை பிரபலங்கள், பொதுமக்கள் என பலரும் ஆர்வத்துடன் வந்து தங்களது வாக்கினை பதிவு செய்து வருகின்றனர்.பதற்றமான வாக்குச்சாவடிகளில் 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
இந்த நிலையில், சென்னை தாமோதரபுரம் வாக்குச்சாவடியில் அ.ம.மு.க.பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் தனது குடும்பத்துடன் வந்து வாக்கினை செலுத்தினார்.
இதனை தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர் ,
தேனி தொகுதியில் எனக்கான வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது. உறுதியாக நான் வெற்றி பெறுவேன். மக்கள் 100 சதவீதம் ஜனநாயக கடமை ஆற்ற வேண்டும்.என தெரிவித்தார்.