< Back
நாடாளுமன்ற தேர்தல்-2024
டெல்லி தெற்கு தொகுதியில் போட்டியிடும் திருநங்கை; உரிய பாதுகாப்பு வழங்க கோர்ட்டு உத்தரவு
நாடாளுமன்ற தேர்தல்-2024

டெல்லி தெற்கு தொகுதியில் போட்டியிடும் திருநங்கை; உரிய பாதுகாப்பு வழங்க கோர்ட்டு உத்தரவு

தினத்தந்தி
|
30 April 2024 8:52 PM IST

டெல்லி தெற்கு தொகுதியில் வேட்புமனு தாக்கல் செய்யும் திருநங்கை வேட்பாளருக்கு உரிய பாதுகாப்பு வழங்க போலீசாருக்கு டெல்லி ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

புதுடெல்லி,

டெல்லியில் உள்ள 7 மக்களவை தொகுதிகளுக்கு வரும் மே 25-ந்தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் நேற்று தொடங்கிய நிலையில், வேட்பாளர்கள் தங்கள் வேட்பு மனுக்களை தாக்கல் செய்து வருகின்றனர்.

இந்த தேர்தலில் டெல்லி தெற்கு தொகுதியில் ராஷ்டிரிய பகுஜன் காங்கிரஸ் கட்சி சார்பில் திருநங்கை வேட்பாளர் ராஜன் சிங் போட்டியிட உள்ளார். இந்நிலையில் தனக்கு சிலர் கொலை மிரட்டல் விடுத்துள்ளதாகவும், போலீசார் தனக்கு உரிய பாதுகாப்பு வழங்க உத்தரவிட வேண்டும் எனவும் கோரி டெல்லி ஐகோர்ட்டில் ராஜன் சிங் மனுத்தாக்கல் செய்தார்.

இந்த வழக்கு நீதிபதி அனூப் குமார் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது வழக்கை விசாரித்த நீதிபதி, வேட்பு மனு தாக்கலின்போது மனுதாரர் ராஜன் சிங்குக்கு உரிய பாதுகாப்பு வழங்க டெல்லி காவல் துணை ஆணையருக்கு உத்தரவிட்டார்.



மேலும் செய்திகள்