< Back
நாடாளுமன்ற தேர்தல்-2024
பா.ஜ.க. சின்னத்துடன் மேற்கு வங்காள கவர்னர் - தேர்தல் ஆணையத்தில் திரிணாமுல் காங்கிரஸ் புகார்
நாடாளுமன்ற தேர்தல்-2024

பா.ஜ.க. சின்னத்துடன் மேற்கு வங்காள கவர்னர் - தேர்தல் ஆணையத்தில் திரிணாமுல் காங்கிரஸ் புகார்

தினத்தந்தி
|
24 May 2024 1:08 PM IST

மேற்கு வங்காள கவர்னர் பா.ஜ.க. சின்னத்தை அணித்து இருந்தது அரசியல் சாசனத்தை மீறும் செயலாகும் என திரிணாமுல் காங்கிரஸ் புகார் அளித்துள்ளது.

கொல்கத்தா,

மேற்குவங்காள மாநிலம், கொல்கத்தாவில் கடந்த ஜனவரி மாதம் நடைபெற்ற நிகழ்ச்சியில் பா.ஜ.க.வின் சின்னமான தாமரையை ஆடையில் அணிந்து அக்கட்சிக்கு ஆதரவாக பிரசாரத்தில் ஈடுபட்டதாக அம்மாநில கவர்னர் சி.வி.ஆனந்த போஸ் மீது தேர்தல் ஆணையத்தில் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் புகாரளித்துள்ளது.

இதுதொடர்பாக தலைமை தேர்தல் ஆணையருக்கு திரிணாமுல் காங்கிரஸ் எழுதியுள்ள புகார் கடிதத்தில்,

மேற்கு வங்காள கவர்னர் சி.வி.ஆனந்த போஸ், மக்களவை பொதுத் தேர்தலில் பா.ஜ.க.வுக்கு ஆதரவாக வாக்கு சேகரிக்க தனது அலுவலகத்தை பயன்படுத்துகிறார்.

குறிப்பாக, கடந்த ஜனவரி 23-ம் தேதி கொல்கத்தாவில் உள்ள ராமர் கோவிலில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்றார். அப்போது அவர், பா.ஜ.க.வுக்கு வாக்கு சேகரிக்கும் வகையில் அக்கட்சியின் சின்னத்தை தனது மார்பில் பொருத்தி இருந்தார்.

கவர்னரின் இந்த செயல் ஜனநாயகத்திற்கு விரோதமானது மட்டுமல்லாமல், அரசியல் சாசனத்தை மீறும் செயலாகும். மேலும் இது நியாயமான, சுதந்திரமான தேர்தலையும் பாதிக்கும். எனவே அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்