மக்கள் மாற்றத்தை கொண்டு வர வேண்டும் - சீமான் பேச்சு
|நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் இன்று சிவகங்கையில் பிரசாரம் செய்தார்.
சிவகங்கை,
சிவகங்கை நாடாளுமன்ற தொகுதியில் நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிடும் எழிலரசியை ஆதரித்து , அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் சிவகங்கையில் இன்று பிரசாரத்தில் ஈடுபட்டார்.அவர் கூறியதாவது ,
நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிடும் பிள்ளைகள் எளிமையான பிள்ளைகள் . இவர்களுக்கு உங்களின் வலியும், வேதனையும் தெரியும். முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி மகன் மு.க.ஸ்டாலின் என்பதைவிட, முதல்-அமைச்சராக மு.க.ஸ்டாலினுக்கு வேறு என்ன தகுதி உள்ளது. அதேபோல் மு.க.ஸ்டாலின் மகன் உதயநிதி என்பதை காட்டிலும் வேறு என்ன தகுதி இருக்கிறது அவருக்கு அமைச்சராக. ஒரே ஒரு தகுதியை சொல்லுங்கள் நான் அரசியலை விட்டே சென்று விடுகிறேன்.ஆனால் நாம் தமிழர் கட்சி அப்படியா? இது உங்கள் பிள்ளைகளின் கட்சி என தெரிவித்தார். மேலும் புதிதாக இந்த முறை மாற்றம் வரனும் பாரு, மாற்றம் வரனும் பாரு" என பாட்டு பாடி வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.