இது சாதாரண காதல் அல்ல.. அதையும் தாண்டி புனிதமானது - கமல்ஹாசன் பிரசாரம்
|மக்கள் மனங்களிலும் எனக்கு இடம் உண்டு என்று கமல்ஹாசன் கூறினார்.
திருச்சி,
திருச்சி ஸ்ரீரங்கத்தில் ம.தி.மு.க. வேட்பாளர் துரை வைகோவை ஆதரித்து மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் பிரசாரம் மேற்கொண்டு வாக்கு சேகரித்தார்.
பிரசாரத்தில் கமல்ஹாசன் பேசியதாவது:-
நான் சீட்டுக்காக வரவில்லை. நாட்டுக்காக வந்துள்ளேன். திராவிட மாடலை பின்பற்றினால் இந்தியாவின் நுழைவுவாயிலாக தமிழ்நாடு இருந்திருக்கும். உங்கள் (மக்கள்) மனங்களிலும் எனக்கு இடம் உண்டு. உங்கள் இல்லங்களிலும் எனக்கு இடம் உண்டு என்பதை அறிவேன்.
தமிழ்நாட்டு மக்களுக்கும், இந்தியாவுக்கும், எனக்கும் உள்ள காதல் சாதாரணமான காதல் அல்ல... அதையும் தாண்டி புனிதமானது. என் காதல் உங்கள் அனைவரின் அன்பாலும் உண்டு; அதனால்தான் அரசியலுக்கு நான் வந்தேன்.
திராவிட மாடல் என்பது ஒரு சிந்தாந்தம். தமிழ்நாட்டில் செயல்படுத்தும் திட்டங்களை, இந்தியா முழுவதும் செயல்படுத்தினால், உலகே இந்தியாவை திரும்பிபார்க்கும். மகளிர் உரிமைத்தொகை, மகளிர் இலவச பேருந்து பயணம், இவையெல்லாம் இந்தியா முழுவதும் வரவேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.