< Back
நாடாளுமன்ற தேர்தல்-2024
என் வெற்றியை தடுக்க பார்க்கிறார்கள் - வித்யாராணி வீரப்பன் புகார்
நாடாளுமன்ற தேர்தல்-2024

என் வெற்றியை தடுக்க பார்க்கிறார்கள் - வித்யாராணி வீரப்பன் புகார்

தினத்தந்தி
|
5 April 2024 8:18 PM IST

எத்தனை தடைகள் வந்தாலும் வெற்றி பெறுவோம் என்று வித்யாராணி வீரப்பன் கூறினார்.

கிருஷ்ணகிரி,

கிருஷ்ணகிரி நாடாளுமன்ற தொகுதி, நாம் தமிழர் கட்சி வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் இன்று மாவட்ட கலெக்டரும் தேர்தல் அலுவலருமான சரயுவிடம் புகார்மனு ஒன்றை அளித்தார்.

அதன்பின்னர் செய்தியாளர்கள் சந்திப்பில் வித்யாராணி வீரப்பன் கூறியதாவது:-

கிருஷ்ணகிரி நாடாளுமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சி வேட்பாளராகிய எனக்கு வெற்றி வாய்ப்பு அதிகரித்துள்ளது. அதை பொறுக்க முடியாமல் எதிர்கட்சிகள் பல்வேறு வகையில் எங்கள் கட்சி பொறுப்பாளர்களுக்கும் தொந்தரவு தருகின்றனர். வேட்புமனு பரிசீலனையில் போது எங்கள் கட்சியினர் மீது காரை ஏற்றுவது போல் சிலர் வந்தனர்.

நேற்றுமுன்தினம் கிருஷ்ணகிரி பஸ் நிலையத்தில் நின்ற எங்கள் கட்சி பொறுப்பாளர்களிடம் சுயேச்சை வேட்பாளர் ஒருவர், மிரட்டியுள்ளார். தேர்தல் பிரசாரத்தின் போது எங்கள் வாகனங்களின் பின், தேர்தல் அதிகாரிகள் வருவதை தவிர வேறு எந்த வேலையும் செய்வதில்லை. போலீசாரும் எங்கள் மீது வேண்டுமென்றே வழக்கு போடுகின்றனர்.

எங்கள் கட்சியின் வெற்றியை தடுப்பதிலேயே அனைவரும் குறியாக உள்ளனர். இது குறித்த புகார் மனுவை மாவட்ட தேர்தல் அலுவலரிடம் வழங்கியுள்ளேன். எத்தனை தடைகள் வந்தாலும் அதை எதிர் கொள்வோம்; வெற்றி பெறுவோம். இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்