< Back
நாடாளுமன்ற தேர்தல்-2024
தீயின் பொறி.. தேர்தலே வெறி.. திருச்சியே குறி.. - துரை வைகோவுக்கு கவிஞர் வைரமுத்து வாழ்த்து
நாடாளுமன்ற தேர்தல்-2024

தீயின் பொறி.. தேர்தலே வெறி.. திருச்சியே குறி.. - துரை வைகோவுக்கு கவிஞர் வைரமுத்து வாழ்த்து

தினத்தந்தி
|
21 March 2024 11:17 AM IST

திருச்சி தொகுதியின் வேட்பாளராக துரை வைகோ போட்டியிடுகிறார்.

சென்னை,

தி.மு.க. கூட்டணியில் ம.தி.மு.க.வுக்கு திருச்சி நாடாளுமன்ற தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அந்த தொகுதியின் வேட்பாளராக துரை வைகோ போட்டியிடுகிறார். இந்த நிலையில், துரை வைகோவுக்கு கவிஞர் வைரமுத்து வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இது குறித்து கவிஞர் வைரமுத்து வெளியிட்டுள்ள எக்ஸ் தளப்பதிவில், "நாடாளுமன்றத் தேர்தலுக்கு வாழ்த்துப்பெற வந்தார் திருச்சி வேட்பாளர் தம்பி துரை வைகோ. தீயின் பொறி.. திராவிட நெறி.. தேர்தலே வெறி.. திருச்சியே குறி நிறைவெற்றி காண்பார் துரை வைகோ" என்று தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்