< Back
நாடாளுமன்ற தேர்தல்-2024
பிரதமர் மோடியின் தலைமையில் நாடு பாதுகாப்பாக உள்ளது - பியூஷ் கோயல்
நாடாளுமன்ற தேர்தல்-2024

'பிரதமர் மோடியின் தலைமையில் நாடு பாதுகாப்பாக உள்ளது' - பியூஷ் கோயல்

தினத்தந்தி
|
28 April 2024 9:04 PM IST

பிரதமர் மோடியின் தலைமையில் நாடு பாதுகாப்பாக உள்ளதாகவும், செழிப்பை நோக்கி முன்னேறி வருவதாகவும் பியூஷ் கோயல் தெரிவித்தார்.

மும்பை,

மராட்டிய மாநிலத்தில் மொத்தம் உள்ள 48 மக்களவை தொகுதிகளுக்கு ஏப்ரல் 19-ந்தேதி தொடங்கி மே 20-ந்தேதி வரை 5 கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இதில் மும்பை வடக்கு தொகுதியில் பா.ஜ.க. வேட்பாளராக மத்திய மந்திரி பியூஷ் கோயல் போட்டியிடுகிறார்.

மும்பை வடக்கு மக்களவை தொகுதிக்கு வரும் மே 20-ந்தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ள நிலையில், தற்போது பியூஷ் கோயல் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார். பிரசாரத்தின் ஒரு பகுதியாக இன்று மும்பை வடக்கு தொகுதியில் பியூஷ் கோயல் தலைமையில் வாகன பேரணி நடைபெற்றது. இந்த பேரணியில் திரளான பா.ஜ.க. தொண்டர்கள் கலந்து கொண்டு பியூஷ் கோயலுக்கு தங்கள் ஆதரவை தெரிவித்தனர். இதன் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது;-

"மராட்டிய மக்கள் எங்களுக்கு ஆதரவளித்து வெற்றி பெற வைக்க வேண்டும் என முடிவு செய்துவிட்டார்கள் என்பதற்கு இன்று நடைபெறும் வாகன பேரணி ஒரு உதாரணம். பிரதமர் மோடியின் தலைமையில் நாட்டில் மிகப்பெரிய வளர்ச்சி ஏற்பட்டுள்ளது. அதோடு நாடு மிகவும் பாதுகாப்பாக உள்ளது, செழிப்பை நோக்கி முன்னேறி வருகிறது. எதிர்கட்சி முற்றிலுமாக தோல்வி அடைந்துவிட்டது."

இவ்வாறு பியூஷ் கோயல் தெரிவித்தார்.

மேலும் செய்திகள்