தேர்தல் அறிக்கையில் சொல்லாததையும் செய்தவர் முதல்-அமைச்சர் - உதயநிதி ஸ்டாலின் பிரசாரம்
|ஐ.பி.எல்., அ.தி.மு.க. இவை இரண்டும் ஒன்றுதான் என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறினார்.
வேலூர்,
வேலூர் தொகுதி தி.மு.க. வேட்பாளர் கதிர் ஆனந்தை ஆதரித்து வாணியம்பாடியில் பிரசாரத்தில் ஈடுபட்ட அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது:-
திமுக தேர்தல் அறிக்கையில் சொல்லாத ஒன்றான காலை உணவு திட்டத்தை அறிமுகம் செய்து வைத்தவர் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின். என் குழந்தையை பார்த்துக்கொள்ள நம் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அய்யா இருக்கிறார் என பெற்றோர்கள் பாராட்டுகின்றனர். மகளிர் உரிமைத்தொகை திட்டத்தை சாத்தியம் இல்லாத ஒன்று எனக்கூறினர். அதனை செய்துகாட்டியவர் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்.
ஐ.பி.எல்., அ.தி.மு.க. இவை இரண்டும் ஒன்றுதான். ஈபிஎஸ் அணி, ஓபிஎஸ் அணி, டிடிவி அணி, சசிகலா அணி என இன்னும் அடுக்கிக்கொண்டே போகலாம். நாட்டின் பன்முகத்தன்மையை பாதுகாக்கவும் - சிறுபான்மையினர் உட்பட அனைத்து மக்களின் நலனை காக்கவும், எதிர் வரும் நாடாளுமன்றத் தேர்தலில் இந்தியா கூட்டணியை மிகப்பெரிய வெற்றி பெற வைக்கும் விதமாக, வேலூர் மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் கழக வேட்பாளர் சகோதரர் கதிர் ஆனந்த் ஆதரித்து வாக்களிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.