< Back
நாடாளுமன்ற தேர்தல்-2024
தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு
நாடாளுமன்ற தேர்தல்-2024

தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு

தினத்தந்தி
|
22 March 2024 1:25 PM IST

தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

சென்னை,

தமிழகத்தை பொறுத்தவரை நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு முதல் கட்டத்திலேயே (ஏப்ரல் 19-ந்தேதி) நடைபெறுகிறது. தமிழகத்தில் தி.மு.க. கூட்டணி, அ.தி.மு.க. கூட்டணி மற்றும் பா.ஜ.க. தலைமையிலான கூட்டணி என்று 3 அணிகளும், நாம் தமிழர் கட்சி தனித்தும் களம் காண்கின்றன. எனவே 4 முனை போட்டி என்பது உறுதியாகியுள்ளது.

இதில் பா.ஜ.க. தலைமையிலான அணியில் பா.ம.க., தமிழ் மாநில காங்கிரஸ், அ.ம.மு.க. உள்ளிட்ட கட்சிகள் இடம் பெற்றுள்ளன. இதில் தமிழ் மாநில காங்கிரசுக்கு ஈரோடு, ஸ்ரீபெரும்புதூர், தூத்துக்குடி ஆகிய 3 தொகுதிகள் ஒதுக்கப்பட்டன.

இந்த நிலையில், நாடாளுமன்ற தேர்தலில் தமிழ் மாநில காங்கிரசில் போட்டியிடும் 3 தொகுதிகளில், 2 தொகுதிகளுக்கான முதற்கட்ட வேட்பாளர்கள் பட்டியலை அக்கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டார். தூத்துக்குடி தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர் பெயர் நாளை மறுநாள் அறிவிக்கப்படும் என ஜி.கே.வாசன் தெரிவித்தார்.

வேட்பாளர்கள் விவரம்:-

1. ஈரோடு – விஜயகுமார்

2. ஸ்ரீபெரும்புதூர் – வேணுகோபால்

மேலும் செய்திகள்