தமிழகத்தில் கரும்பு விவசாயி சின்னம் - 17 தொகுதிகளில் போட்டி
|கரும்பு விவசாயி சின்னம் பெற்ற பாரதிய மக்கள் ஐக்கிய கட்சி தமிழகத்தில் 17 தொகுதிகளில் மனு தாக்கல் செய்துள்ளது.
சென்னை,
நாம் தமிழர் கட்சிக்கு வழங்கப்பட்டிருந்த கரும்பு விவசாயி சின்னம் இந்த முறை கர்நாடகத்தை சேர்ந்த பாரதிய மக்கள் ஐக்கிய கட்சிக்கு ஒதுக்கப்பட்டது.உரிய நேரத்தில் விண்ணப்பிக்க வில்லை என்று தெரிவித்து பாரதிய மக்கள் ஐக்கிய கட்சிக்கு கரும்பு விவசாயி சின்னத்தை தேர்தல் ஆணையம் ஒதுக்கியது குறிப்பிடத்தக்கது. தமிழ்நாடு உள்பட 11 மாநிலங்களுக்கு ஒரே சின்னத்தை அந்தக் கட்சி பெற்றுள்ளது. நாம் தமிழர் கட்சிக்கு தேர்தல் ஆணையம் மைக் சின்னத்தை ஒதுக்கீடு செய்துள்ளது.கரும்பு விவசாயி சின்னத்தில் தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகளிலும், புதுச்சேரியிலும் போட்டியிடவுள்ளதாக பாரதிய மக்கள் ஐக்கிய கட்சி அறிவித்திருந்தது.
இந்நிலையில், தமிழகத்தில் 17 தொகுதிகளில் பாரதிய மக்கள் ஐக்கிய கட்சி கரும்பு விவசாயி சின்னத்தில் போட்டியிடுகிறது.
கரும்பு விவசாயி சின்னம் பெற்ற பாரதிய மக்கள் ஐக்கிய கட்சி தமிழகத்தில் 17 தொகுதிகளில் மனு தாக்கல் செய்துள்ளதாகவும் மற்ற தொகுதிகளில் வேட்பாளர்கள் கிடைக்காததால் போட்டியிடவில்லை என்று பா.ம.ஐ.க தலைவர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். சீமான் கட்சி கடந்த முறை போட்டியிட்ட கரும்பு விவசாயி சின்னம் இம்முறை பாரதிய மக்கள் ஐக்கிய கட்சிக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது.