< Back
நாடாளுமன்ற தேர்தல்-2024
கல்வீச்சு சம்பவம் : ஆந்திர முதல்-மந்திரி ஜெகன் மோகன் ரெட்டி விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன் - பிரதமர் மோடி
நாடாளுமன்ற தேர்தல்-2024

கல்வீச்சு சம்பவம் : ஆந்திர முதல்-மந்திரி ஜெகன் மோகன் ரெட்டி விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன் - பிரதமர் மோடி

தினத்தந்தி
|
13 April 2024 11:36 PM IST

சட்டமன்ற மற்றும் நாடாளுமன்ற தேர்தலுக்கான தனது கட்சியின் வேட்பாளர்களுக்காக ஜெகன் மோகன் ரெட்டி பிரச்சாரம் செய்து கொண்டிருந்த போது கல்வீச்சு சம்பவம் நிகழ்ந்தது.

விஜயவாடா,

ஆந்திரப் பிரதேச முதல்-மந்திரி ஒய்.எஸ்.ஜெகன் மோகன் ரெட்டி, விஜயவாடாவில் இன்று நடந்த தேர்தல் பிரச்சாரத்தின் போது அடையாளம் தெரியாத நபரின் கல்வீச்சு தாக்குதலில் காயமடைந்தார்.

இதில் ஜெகன் மோகன் ரெட்டியின் இடது புருவத்தில் கடுமையான காயம் ஏற்பட்டது. உடனடியாக அவருக்கு பேருந்தில் இருந்த டாக்டர்கள் முதலுதவி சிகிச்சை அளித்தனர். இந்த தாக்குதலில் முதல்-மந்திரிக்கு அருகில் இருந்த எம்.எல்.ஏ. வெள்ளம்பள்ளியின் இடது கண்ணிலும் காயம் ஏற்பட்டது.

சிங் நகர் தாபா கோட்லா மையத்தில் ஒய்.எஸ்.ஆர்.சி.பி. தலைவர் அடுத்த மாதம் நடைபெற உள்ள சட்டமன்ற மற்றும் நாடாளுமன்ற தேர்தலுக்கான தனது கட்சியின் வேட்பாளர்களுக்காக பிரச்சாரம் செய்து கொண்டிருந்த போது இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.

இந்நிலையில் ஜெகன் மோகன் ரெட்டி விரைவில் குணமடைய, தான் பிரார்த்தனை செய்வதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் வலைதளத்தில், "ஆந்திர முதல்-மந்திரி ஜெகன் மோகன் ரெட்டி விரைவில் குணமடைந்து நல்ல ஆரோக்கியம் பெற பிரார்த்திக்கிறேன்" என்று அதில் பிரதமர் மோடி பதிவிட்டுள்ளார்.


மேலும் செய்திகள்