< Back
நாடாளுமன்ற தேர்தல்-2024
ரிப்பன் மாளிகையில் சிறப்பு கண்காணிப்பு மையம் - சென்னை மாவட்ட தேர்தல் அதிகாரி ராதாகிருஷ்ணன் தகவல்
நாடாளுமன்ற தேர்தல்-2024

ரிப்பன் மாளிகையில் சிறப்பு கண்காணிப்பு மையம் - சென்னை மாவட்ட தேர்தல் அதிகாரி ராதாகிருஷ்ணன் தகவல்

தினத்தந்தி
|
18 April 2024 9:48 PM IST

ஒவ்வொரு சட்டமன்ற தொகுதிக்கும் இரண்டு அலுவலர்கள் கண்காணிப்பு பணியில் ஈடுபட உள்ளதாக ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

சென்னை,

தமிழகத்தில் உள்ள 39 மக்களவை தொகுதிகளுக்கும் 19-ந்தேதி(நாளை) ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் தேர்தல் ஆணையம் முழுவீச்சில் மேற்கொண்டுள்ளது. தேர்தல் பாதுகாப்பு பணிகளுக்காக தமிழகத்தில் 19 ஆயிரம் துணை ராணுவப் படையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.

இதனிடையே சென்னையில் அமைக்கப்பட்டுள்ள 3,726 வாக்குச்சாவடி மையங்களில் நாளை நடைபெறப்போகும் வாக்குப்பதிவு நடைமுறைகள் சி.சி.டி.வி. கேமரா மூலம் நேரடியாக கண்காணிக்கப்படுகிறது. இதற்காக ரிப்பன் மாளிகையில் சிறப்பு கண்காணிப்பு மையம் அமைக்கப்பட்டுள்ளதாக மாவட்ட தேர்தல் அதிகாரி ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் கூறுகையில், ஒவ்வொரு சட்டமன்ற தொகுதிக்கும் இரண்டு அலுவலர்கள் கண்காணிப்பு பணியில் ஈடுபட உள்ளதாக தெரிவித்தார். மேலும் பதற்றமான 685 வாக்குச்சாவடிகள், மிகப் பதற்றமான 23 வாக்குச்சாவடிகள் ஆகியவற்றில் தீவிர கண்காணிப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.


மேலும் செய்திகள்