குமரியில் இன்று தேர்தல் பரப்புரையை தொடங்குகிறார் சீமான்
|நாம் தமிழர் கட்சி வேட்பாளா்களை ஆதரித்து குமரியில் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பிரசாரம் செய்கிறார்.
நாகர்கோவில்,
கன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதியில் நாம் தமிழர் கட்சி சார்பில் மரிய ஜெனிபர் போட்டியிடுகிறார். இதே போல விளவங்கோடு சட்டசபை தொகுதி இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சி சார்பில் ஜெமினி களமிறக்கப்பட்டு உள்ளார்.
இந்த நிலையில் தங்களது கட்சி வேட்பாளர்களை ஆதரித்து நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தீவிர பிரசாரத்தை தொடங்க இருக்கிறார்.
அந்த வகையில் சீமான் குமரி மாவட்டத்தில் இன்று 4 இடங்களில் பிரசாரம் செய்கிறார். அதன்படி இன்று காலை 9 மணிக்கு அருமனையில் பிரசாரத்தை தொடங்குகிறார். தொடர்ந்து காலை 10.30 மணிக்கு அழகியமண்டபத்திலும், 11 மணிக்கு குளச்சல் பஸ் நிலையம் முன்பும், பகல் 12.30 மணிக்கு கன்னியாகுமரியிலும் தங்களது கட்சி வேட்பாளர்களுக்கு வாக்கு சேகரிக்கிறார்.
பிரசாரம் முடிந்ததும் நெல்லை மாவட்டத்துக்கு புறப்பட்டு செல்கிறார். முன்னதாக தேர்தல் பிரசாரத்துக்காக சீமான் நேற்று இரவு குமரி மாவட்டம் வந்தார். அவர் திக்கணங்கோட்டில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் தங்கி ஓய்வு எடுத்தார்.