< Back
நாடாளுமன்ற தேர்தல்-2024
சேலம், கோவை தொகுதி தேர்தல் நடத்தும் அதிகாரியை மாற்ற வேண்டும்: அ.தி.மு.க. கோரிக்கை

கோப்புப்படம்

நாடாளுமன்ற தேர்தல்-2024

சேலம், கோவை தொகுதி தேர்தல் நடத்தும் அதிகாரியை மாற்ற வேண்டும்: அ.தி.மு.க. கோரிக்கை

தினத்தந்தி
|
31 March 2024 12:34 AM IST

சேலம், கோவை தொகுதி தேர்தல் நடத்தும் அதிகாரியை மாற்ற வேண்டும் என்று தலைமை தேர்தல் அதிகாரி அலுவலகத்தில் அ.தி.மு.க. கோரிக்கை விடுத்துள்ளது.

சென்னை,

தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அலுவலகத்தில் அ.தி.மு.க. வக்கீல் பிரிவு செயலாளர் ஐ.எஸ்.இன்பதுரை நேற்று அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:-

சேலம் தொகுதி தி.மு.க. வேட்பாளர் செல்வகணபதி மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் பிரிவு 17-க்கு எதிராக 2 வாக்குரிமையை பெற்றுள்ளார். இதுகுறித்து மாவட்ட தேர்தல் அதிகாரியிடம் புகார் அளித்தும், அவரது வேட்புமனு சட்டவிரோதமாக ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. மேலும் அவரது வேட்புமனுவில் தண்டனை பெற்ற வழக்குகள் குறித்த விவரங்களை மறைத்துள்ளார்.

எனவே அவரது வேட்புமனுவை நிராகரிக்க வேண்டும் என்ற கோரிக்கையை தேர்தல் அதிகாரி ஏற்காமல் எந்திரத்தனமாக செயல்பட்டுள்ளார். அவரை மாற்ற வேண்டும்.

கோவை பா.ஜனதா வேட்பாளர் அண்ணாமலை தனது வேட்புமனுவை ஸ்டாம்ப் பேப்பருக்கு பதிலாக கோர்ட்டு முத்திரை தாளில் தாக்கல் செய்துள்ளார். அவருடைய வேட்புமனுவும் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. எனவே அவருக்கு ஆதரவாக செயல்பட்டதாக கோவை தொகுதி தேர்தல் அதிகாரியையும் மாற்ற வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்