< Back
நாடாளுமன்ற தேர்தல்-2024
நாடாளுமன்ற தேர்தல்-2024
நாமக்கல்லில் ரூ.4.5 கோடி பணம் பறிமுதல் - வருமான வரித்துறை அதிரடி
|3 April 2024 6:29 PM IST
நாமக்கல்லில் வருமான வரித்துறையினர் நடத்திய சோதனையில் ரூ.4.5 கோடி பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
நாமக்கல்,
நாமக்கல் மாவட்டம் மோகனூர் சாலையில் உள்ள காந்திநகர் பகுதியில் வசித்து வரும் தனியார் பேருந்து உரிமையாளர் சந்திரசேகர் என்பவர் வீட்டில் வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்ய பணம் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக வருமான வரித்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.
தகவலின்பேரில் சந்திரசேகரின் வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் மதியத்தில் இருந்து சோதனை நடத்தி வருகின்றனர். இந்த சோதனையில் கணக்கில் வராத சுமார் 4.5 கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக வருமான வரித்துறையினர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பறிமுதல் செய்யப்பட்ட பணத்தை எண்ணும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.
வருமான வரித்துறை வளையத்தில் சிக்கியுள்ள சந்திரசேகர் பிரபல அரசியல் கட்சிக்கு நெருக்கமானவர் என கூறப்படும் நிலையில் அதிகாரிகள் அவரிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.