< Back
நாடாளுமன்ற தேர்தல்-2024
தீவிர மக்கள் பணிக்கு திரும்பவே கவர்னர் பதவியை ராஜினாமா செய்தேன் - தமிழிசை சவுந்தரராஜன்
நாடாளுமன்ற தேர்தல்-2024

தீவிர மக்கள் பணிக்கு திரும்பவே கவர்னர் பதவியை ராஜினாமா செய்தேன் - தமிழிசை சவுந்தரராஜன்

தினத்தந்தி
|
18 March 2024 9:52 PM IST

தீவிரமான மக்கள் பணிக்கு திரும்ப வேண்டும் என்பதற்காக கவர்னர் பதவியை ராஜினாமா செய்தேன் சென்று தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

சென்னை,

தெலுங்கானா, புதுச்சேரி மாநில கவர்னராக இருந்தவர் தமிழிசை சவுந்தரராஜன். இவர் கவர்னர் பதவியை இன்று ராஜினாமா செய்தார். தமிழிசை சவுந்தரராஜன் ராஜினாமா கடிதத்தை ஜனாதிபதி திரவுபதி முர்முவுக்கு அனுப்பி வைத்துள்ளார்.

நாடாளுமன்ற தேர்தலில் தமிழிசை சவுந்தரராஜன் போட்டியிடலாம் என தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில், புதுச்சேரி, தெலுங்கானா கவர்னர் பதவிகளை ராஜினாமா செய்தபின் தமிழிசை சவுந்தரராஜன் இன்று தமிழ்நாடு வந்தடைந்தார்.

சென்னை விமான நிலையம் வந்தடைந்த தமிழிசை சவுந்தரராஜன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது:-

தீவிரமான மக்கள் பணிக்கு திரும்ப வேண்டும் என்பதற்காகவே கவர்னர் பதவியை ராஜினாமா செய்தேன். தெலுங்கானா, புதுச்சேரி மக்களுக்கு நன்றியுடையவளாக இருப்பேன்.

அதேவேளை, மக்களுக்கு நேரடியாக பணியாற்றுவதே என் விருப்பம். தீவிரமான மக்கள் பணியாற்ற எனது விருப்பத்தின்பெயரில் கவர்னர் பதவியை ராஜினாமா செய்துள்ளேன். மக்கள் பணிக்காக கவர்னர் பதவியை ராஜினாமா செய்துள்ளேன் என்பது உண்மை. நான் நேரடி, நேர்மையான அரசியலுக்கு வந்துள்ளேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்