< Back
நாடாளுமன்ற தேர்தல்-2024
அருணாச்சலபிரதேசம்: 4 தொகுதிகளில் மறுவாக்குப்பதிவு மும்முரம்
நாடாளுமன்ற தேர்தல்-2024

அருணாச்சலபிரதேசம்: 4 தொகுதிகளில் மறுவாக்குப்பதிவு மும்முரம்

தினத்தந்தி
|
24 April 2024 1:29 PM IST

அருணாச்சலபிரதேசத்தில் 4 சட்டசபை தொகுதிகளுக்கான மறுவாக்குப்பதிவு மும்முரமாக நடைபெற்று வருகிறது.

இட்டாநகர்,

அருணாச்சலபிரதேசத்தில் 2 நாடாளுமன்ற தொகுதிகளுக்கு கடந்த 19ம் தேதி தேர்தல் நடைபெற்றது. அதேபோல், 60 தொகுதிகளை கொண்ட சட்டசபைக்கும் ஒரேகட்டமாக தேர்தல் நடைபெற்றது.

இதில் ஒருசில இடங்களில் வன்முறை சம்பவங்கள் அரங்கேறின. குறிப்பாக, பிம்யங், நியாபின், நட்சோ, ரும்கங் ஆகிய 4 சட்டமன்ற தொகுதிகளுக்கு உள்பட்ட சில வாக்குச்சாவடிகளில் வன்முறை நடைபெற்றது. இதனால், அங்கு தேர்தல் ரத்து செய்யப்பட்டது.

இந்நிலையில், 4 தொகுதிகளுக்கு ரத்து செய்யப்பட்ட தேர்தலுக்கான மறுவாக்குப்பதிவு இன்று நடைபெற்று வருகிறது. காலை 6 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மும்முரமாக நடைபெற்று வருகிறது. வாக்குப்பதிவு மதியம் 2 மணியுடன் நிறைவடையும் என தேர்தல் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மேலும் செய்திகள்