< Back
நாடாளுமன்ற தேர்தல்-2024
நாடாளுமன்ற தேர்தல்-2024
இருசக்கர வாகனத்தில் சென்று வாக்களித்தார் ரங்கசாமி
|19 April 2024 9:55 AM IST
புதுச்சேரி முதல்-அமைச்சர் ரங்கசாமி தனது வாக்கினை பதிவு செய்தார்.
புதுச்சேரி,
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளில் நாடாளுமன்ற தேர்தலுக்கான முதற்கட்ட வாக்குப்பதிவு காலை 7 மணி முதல் நடைபெற்று வருகிறது. காலையில் இருந்தே மக்கள் தங்களது ஜனநாயக கடமையை ஆற்றி வருகின்றனர்.
இந்த நிலையில், புதுச்சேரி திலாசுப்பேட்டை பகுதியில் உள்ள அரசு ஆண்கள் நடுநிலைப் பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடியில் முதல்-அமைச்சர் ரங்கசாமி தனது வாக்கினை பதிவு செய்தார். ரங்கசாமி வீட்டில் இருந்து வாக்குச்சாவடிக்கு காரில் செல்வதற்கு பதிலாக தனது இருசக்கர வாகனத்தில் சென்றார்.