< Back
நாடாளுமன்ற தேர்தல்-2024
ஆந்திராவில் ஒய்.எஸ்.ஆர். காங்கிரசும், தெலுங்குதேசமும் பா.ஜனதாவின் பி டீம் - ராகுல் காந்தி கிண்டல்
நாடாளுமன்ற தேர்தல்-2024

ஆந்திராவில் ஒய்.எஸ்.ஆர். காங்கிரசும், தெலுங்குதேசமும் பா.ஜனதாவின் 'பி டீம்' - ராகுல் காந்தி கிண்டல்

தினத்தந்தி
|
11 May 2024 11:36 PM GMT

பி.ஜே.பி. கட்சியின் பி என்றால் பாபு (சந்திரபாபு), ஜே என்றால் ஜெகன், பி என்றால் பவன் கல்யாண் என்று ராகுல் காந்தி கூறியுள்ளார்.

கடப்பா,

ஆந்திராவில் நாடாளுமன்ற தேர்தலுடன், சட்டசபை தேர்தலும் நடக்கிறது. இந்த மாநிலத்தின் கடப்பாவில் நேற்று நடந்த காங்கிரஸ் தேர்தல் பிரசார கூட்டத்தில் அவர் கலந்து கொண்டு பேசினார்.

அப்போது ஆந்திராவில் ஆளும் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளை கடுமையாக சாடினார்.

இதுதொடர்பாக அவர் தனது உரையில், "ஆந்திராவை இன்று பா.ஜனதாவின் பி டீம்தான் ஆளுகிறது. பி.ஜே.பி. கட்சியின் பி என்றால் பாபு (சந்திரபாபு), ஜே என்றால் ஜெகன், பி என்றால் பவன் கல்யாண். இந்த 3 பேரின் ரிமோட் கண்ட்ரோல் பிரதமர் மோடியிடம் இருக்கிறது. ஏனெனில் அவர்தான் அமலாக்கத்துறை, சி.பி.ஐ. மற்றும் விசாரணை அமைப்புகளை வைத்திருக்கிறார்.

ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ், தெலுங்குதேசம், ஜனசேனா ஆகிய இந்த 3 கட்சிகளும் பா.ஜனதாவின் பி டீம்கள். ஆந்திராவின் முன்னாள் முதல்-மந்திரி ராஜசேகர ரெட்டி எனது தந்தை ராஜீவ் காந்திக்கு ஒரு சகோதரரை போல இருந்தார். இரு தலைவர்களும் தனிப்பட்ட முறையில் நல்லுறவு ெகாண்டிருந்தனர்.

ஆந்திரா முழுவதும் ராஜசேகர ரெட்டி மேற்கொண்ட பாதயாத்திரைதான் நான் இந்திய ஒற்றுமை பயணம் மேற்கொள்ள உத்வேகமாக இருந்தது" என்று ராகுல் காந்தி கூறினார்.

மேலும் செய்திகள்