< Back
நாடாளுமன்ற தேர்தல்-2024
காங்கிரஸ் தேர்தல் அறிக்கை குறித்து கருத்துகளை கூறுங்கள் - மக்களுக்கு ராகுல் காந்தி அழைப்பு
நாடாளுமன்ற தேர்தல்-2024

காங்கிரஸ் தேர்தல் அறிக்கை குறித்து கருத்துகளை கூறுங்கள் - மக்களுக்கு ராகுல் காந்தி அழைப்பு

தினத்தந்தி
|
8 April 2024 1:20 AM IST

காங்கிரஸ் தேர்தல் அறிக்கை ஒவ்வொரு இந்தியனின் குரலாக உள்ளது என்று ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

புதுடெல்லி,

18-வது மக்களவை தேர்தலுக்கான தேர்தல் அறிக்கையை காங்கிரஸ் கட்சி கடந்த வெள்ளிக்கிழமை வெளியிட்டது. நீட் தேர்வு கட்டாயம் இல்லை, ஏழை பெண்களுக்கு ஆண்டுக்கு ரூ.1 லட்சம் என்பன உள்ளிட்ட பல்வேறு வாக்குறுதிகள் காங்கிரசின் தேர்தல் அறிக்கையில் இடம் பெற்றுள்ளன.

இந்த நிலையில் காங்கிரஸ் தேர்தல் அறிக்கை குறித்து மக்கள் தங்களது கருத்துகளை தெரிவிக்க வேண்டும் என்று ராகுல் காந்தி வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக இன்ஸ்டாகிராம் தளத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் பேசியுள்ளதாவது:-

காங்கிரஸ் தேர்தல் அறிக்கை ஒவ்வொரு இந்தியனின் குரலாக உள்ளது, உங்கள் எண்ணங்களை சமூக ஊடகங்களில் பகிரவும் இது ஒரு புரட்சிகரமான அறிக்கை என்று பலர் என்னிடம் கூறினர்.

தேர்தல் அறிக்கையை வடிவமைக்க ஆலோசனைகளை வழங்கிய மக்களுக்கு எனது மனமார்ந்த நன்றி. தேர்தல் அறிக்கை குறித்த உங்களது கருத்துகளை என்னுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். அதில் உங்களுக்கு என்ன பிடித்திருக்கிறது, என்ன செய்யவில்லை என்பதை கூறுங்கள்.

இவ்வாறு அந்த வீடியோவில் ராகுல் காந்தி பேசியுள்ளார்.

மேலும் செய்திகள்