< Back
நாடாளுமன்ற தேர்தல்-2024
பைக்கில் சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட ராதிகா சரத்குமார்
நாடாளுமன்ற தேர்தல்-2024

பைக்கில் சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட ராதிகா சரத்குமார்

தினத்தந்தி
|
13 April 2024 5:38 AM IST

கணவர் சரத்குமார் பைட் ஓட்ட, பின்னால் அமர்ந்திருந்த ராதிகா வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

விருதுநகர்,

நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் வரும் 19-ம் தேதி தொடங்கி ஜூன் 1ம் தேதி வரை 7 கட்டங்களாக நடைபெற உள்ளது.

தமிழ்நாட்டில் 39 தொகுதிகள், புதுச்சேரி என மொத்தம் 40 தொகுதிகளிலும் வரும் 19ம் தேதி ஒரேகட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலில் பதிவாகும் வாக்குகள் ஜூன் 4ம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அரசியல் கட்சி தலைவர்கள் தீவிர வாக்குசேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், விருதுநகர் தொகுதி பா.ஜ.க. வேட்பாளராக ராதிகா சரத்குமார் களமிறங்கியுள்ளார். அவர் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார். அந்த வகையில் நேற்று ராதிகா சரத்குமார் தனது கணவர் சரத்குமாருடன் பைக்கில் முன்னால் அமர்ந்திருந்து பல்வேறு தெருக்களுக்கு சென்று வாக்குசேகரிப்பில் ஈடுபட்டார்.

மேலும் செய்திகள்