< Back
நாடாளுமன்ற தேர்தல்-2024
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேர்தல் அறிக்கை வெளியீடு
நாடாளுமன்ற தேர்தல்-2024

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேர்தல் அறிக்கை வெளியீடு

தினத்தந்தி
|
6 April 2024 4:06 PM IST

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி பொதுச்செயலாளர் டி.ராஜா தேர்தல் அறிக்கையை வெளியிட்டார்.

புதுடெல்லி ,

நாடாளுமன்ற தேர்தல் வரும் 19ம் தேதி முதல் 7 கட்டங்களாக நடைபெறுகிறது. தேர்தலில் பதிவாகும் வாக்குகள் ஜூன் 4ம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. .இதையடுத்து அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றன.தேர்தல் கூட்டணி, தேர்தல் பரப்புரை, தொகுதி பங்கீடு, தேர்தல் அறிக்கை தயாரிப்பு உள்பட பல்வேறு நடவடிக்கைகளை அரசியல் கட்சிகள் துரிதப்படுத்தியுள்ளன.

இந்த நிலையில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அக்கட்சியின் பொதுச்செயலாளர் டி.ராஜா தேர்தல் அறிக்கையை வெளியிட்டார்.

நுழைவுத்தேர்வுகள் உள்ளிட்டவற்றில், மாநில அரசுகளே முடிவெடுக்கும் வகையில் மாநில பட்டியலுக்கு மாற்றப்படும். ஜம்மு - காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்துடன் கூடிய மாநில அந்தஸ்து வழங்கப்படும். பிரதமர் நிவாரண நிதி விவரங்கள் பகிரங்கப்படுத்தப்படும் .சமூகநலன் மற்றும் அரசின் நலத்திட்டங்களைப் பெற ஆதார் கட்டாயம் என்ற முறை நீக்கப்படும் உள்ளிட்ட பல்வேறு முக்கிய அம்சங்கள் இடம் பெற்றுள்ளன.

மேலும் செய்திகள்