அ.தி.மு.க.,வுக்கு அதிக வாக்குகளை பெற்றுத்தருவோருக்கு பரிசு: விஜயபாஸ்கர் அறிவிப்பு
|திருச்சி தொகுதியில் அதிக வாக்குகளை பெற்றுத்தந்து அ.தி.மு.க-வை வெற்றி பெற வைக்கும் நகர செயலாளருக்கு இனோவா கார் பரிசாக வழங்குவேன் என்று முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் கூறியுள்ளார்.
திருச்சி,
நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலில் திருச்சி தொகுதியில், அ.தி.மு.க.,வை வெற்றி பெற வைத்தால் நகர செயலாளருக்கு இன்னோவா காரும், வட்ட செயலாளருக்கு தங்க சங்கிலியும் பரிசாக அளிக்கப்படும் என அ.தி.மு.க முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் அறிவித்துள்ளார்.
2024 மக்களவை பொதுத்தேர்தலில் திருச்சி தொகுதியில் அ.தி.மு.க சார்பில் ப.கருப்பையா போட்டியிடுகிறார். இவருக்கு பிரசாரம் செய்ய நேற்று திருச்சிக்கு வந்திருந்த விஜயபாஸ்கர் இத்தகைய அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
கருப்பையாவிற்கு எதிராக திருச்சியில் ம.தி.மு.க சார்பில் துரை வைகோ, அ.ம.மு.க. சார்பாக செந்தில்நாதன் என கிட்டத்தட்ட 38 போட்டியாளர்கள் களம் காண்கின்றனர். தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற இன்னும் 2 வாரங்களே உள்ள நிலையில், மாநிலம் முழுவதும் தலைவர்கள் சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொண்டு பிரசாரம் செய்து வருகின்றனர்.