< Back
நாடாளுமன்ற தேர்தல்-2024
பிரதமர் மோடியின் பரப்புரை அவர் வகிக்கும் பதவிக்கு ஏற்புடையது அல்ல - முத்தரசன்
நாடாளுமன்ற தேர்தல்-2024

'பிரதமர் மோடியின் பரப்புரை அவர் வகிக்கும் பதவிக்கு ஏற்புடையது அல்ல' - முத்தரசன்

தினத்தந்தி
|
2 May 2024 7:14 PM IST

பிரதமர் மோடியின் பரப்புரை நாட்டுக்கும் ஜனநாயகத்திற்கும் ஆபத்தை ஏற்படுத்தக்கூடியது.

ஈரோடு,

பிரதமர் மோடியின் பரப்புரை அவர் வகிக்கும் பதவிக்கு ஏற்புடையது அல்ல என்று இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் முத்தரசன் விமர்சித்துள்ளார். இது தொடர்பாக கோபிசெட்டிப்பாளையத்தில் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது;-

"பிரதமர் மோடி வகிக்கும் பதவிக்கு அவர் செய்கின்ற பரப்புரை ஏற்புடையது அல்ல. அவர் மிக உயர்ந்த பொறுப்பில் இருக்கிறார். மீண்டும் அந்த பதவிக்கு அவர் வரலாம், வராமலும் போகலாம்.

ஒரு நாட்டுக்கு தலைமை தாங்கும் தலைவர், பொறுப்பான அமைச்சர் பதவியில் இருப்பவர், கடுகளவு கூட பொறுப்புணர்ந்து பேசாமல் பொறுப்பற்ற முறையில் தொடர்ந்து பேசிக்கொண்டிருப்பது மிகவும் கண்டனத்திற்குரியது. அவரது பரப்புரை நாட்டுக்கும், ஜனநாயகத்திற்கும் ஆபத்தை ஏற்படுத்தக்கூடியது."

இவ்வாறு முத்தரசன் தெரிவித்தார்.

மேலும் செய்திகள்