< Back
நாடாளுமன்ற தேர்தல்-2024
நாடாளுமன்ற தேர்தல்-2024
நாடாளுமன்றத்தில் செங்கோலை நிறுவி தமிழக மக்களுக்கு பெருமை சேர்த்தவர் பிரதமர் மோடி - நடிகை நமீதா பிரசாரம்
|10 April 2024 11:36 AM IST
கடந்த 10 வருடங்களில் பிரதமர் மோடி பல்வேறு நலத்திட்டங்களை நமக்கு செய்துள்ளார் என்று நடிகை நமீதா கூறியுள்ளார்.
நீலகிரி,
நீலகிரி நாடாளுமன்ற தொகுதி பா.ஜனதா வேட்பாளர் எல்.முருகனை ஆதரித்து நடிகையும் பா.ஜ.க.,வை சேர்ந்தவரும் நட்சத்திர பேச்சாளருமான நமீதா பவானிசாகர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட கே.என்.பாளையம் பகுதியில் திறந்த வழி வேனில் பொதுமக்கள் மத்தியில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
அப்போது அவர் கூறியதாவது:-
கடந்த 10 வருடங்களில் நமது பாரத பிரதமர் மோடி பல்வேறு நலத்திட்டங்களை நமக்கு செய்துள்ளார். கொரோனா காலங்களில் உலகத்தையே மிரட்டிக் கொண்டிருந்த கொரோனா வைரசை தடுப்பதற்காக இலவச தடுப்பூசி நாடு முழுவதும் வழங்கி நமது உயிரை பாதுகாத்தார்.
நாடாளுமன்றத்தில் செங்கோலை நிறுவி நமது தமிழக மக்களுக்கு பெருமை சேர்த்துள்ளார் பிரதமர் மோடி. மேலும், இது போன்ற பல்வேறு நலத்திட்டங்களை செய்த பிரதமருக்கு நன்றி கடனாக தாமரை சின்னத்தில் நாம் ஓட்டு போட வேண்டும் என்று நமீதா பேசினார்.