< Back
நாடாளுமன்ற தேர்தல்-2024
பா.ம.க. வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு
நாடாளுமன்ற தேர்தல்-2024

பா.ம.க. வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு

தினத்தந்தி
|
22 March 2024 10:10 AM IST

10 தொகுதிகளில், 9 தொகுதிகளுக்கான முதற்கட்ட வேட்பாளர்கள் பட்டியலை பா.ம.க. வெளியிட்டுள்ளது.

சென்னை,

தமிழகத்தை பொறுத்தவரை நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு முதல் கட்டத்திலேயே (ஏப்ரல் 19-ந்தேதி) நடைபெறுகிறது. தமிழகத்தில் தி.மு.க. கூட்டணி, அ.தி.மு.க. கூட்டணி மற்றும் பா.ஜனதா தலைமையிலான கூட்டணி என்று 3 அணிகளும், நாம் தமிழர் கட்சி தனித்தும் களம் காண்கின்றன. எனவே 4 முனை போட்டி என்பது உறுதியாகியுள்ளது.

இதில் பா.ஜனதா தலைமையிலான அணியில் பா.ம.க., தமிழ் மாநில காங்கிரஸ், அ.ம.மு.க. உள்ளிட்ட கட்சிகள் இடம் பெற்றுள்ளன. பல கட்டங்களாக நடைபெற்றுவந்த பேச்சுவார்த்தை கடந்த 2 தினங்களுக்கு முன் நிறைவு பெற்றது. இதையடுத்து பா.ம.க.வுக்கு 10 தொகுதிகள் ஒதுக்கப்பட்டன.

இந்த நிலையில், நாடாளுமன்ற தேர்தலில் பா.ம.க. போட்டியிடும் 10 தொகுதிகளில், 9 தொகுதிகளுக்கான முதற்கட்ட வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

இது குறித்து பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

தமிழ்நாட்டில் வருகிற 19-ம் தேதி அன்று நடைபெறவிருக்கும் மக்களவைத் தேர்தலில், தேசிய ஜனநாயகக் கூட்டணியில் பாட்டாளி மக்கள் கட்சிக்கு 10 மக்களவைத் தொகுதிகள் ஒதுக்கப்பட்டு உள்ளன. அவற்றில் பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் போட்டியிடும் 9 வேட்பாளர்களின் பெயர்கள் அடங்கிய முதல் பட்டியல் பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் ஒப்புதலுடன் அறிவிக்கப்படுகிறது. காஞ்சிபுரம் மக்களவைத் தொகுதியின் வேட்பாளர் விவரம் பின்னர் அறிவிக்கப்படும்.

9 வேட்பாளர்கள் விவரம்:-

1. திண்டுக்கல் - கவிஞர் ம.திலகபாமா, பி.காம் மாநிலப் பொருளாளர், பா.ம.க.

2. அரக்கோணம் - வழக்கறிஞர் கே.பாலு, பி.காம்., பி.எல் செய்தித் தொடர்பாளர், பா.ம.க. தலைவர், வழக்கறிஞர்கள் சமூகநீதிப் பேரவை

3 ஆரணி - முனைவர் அ.கணேஷ் குமார், பி.இ., பி.எச்டி., முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர், மாவட்டச் செயலாளர், பா.ம.க. திருவண்ணாமலை கிழக்கு மாவட்டம்,

4. கடலூர் - தங்கர் பச்சான், டி.எப்.டெக், எழுத்தாளர், திரைப்பட இயக்குனர்,

5. மயிலாடுதுறை - ம.க.ஸ்டாலின், பி.எஸ்சி., மாவட்டச் செயலாளர், பா.ம.க. தஞ்சாவூர் வடக்கு மாவட்டம்

6. கள்ளக்குறிச்சி - இரா. தேவதாஸ் உடையார், பி.ஏ.,பி.எல்., நாடாளுமன்ற மக்களவை முன்னாள் உறுப்பினர், மாநிலத் துணைத் தலைவர், பா.ம.க.

7. தர்மபுரி - அரசாங்கம், பி.காம்., மாவட்டச் செயலாளர், பா.ம.க. தர்மபுரி கிழக்கு மாவட்டம்

8. சேலம் - ந. அண்ணாதுரை, பி.ஏ.,பி.எல்., முன்னாள் மாவட்டச் செயலாளர், பா.ம.க. சேலம் தெற்கு மாவட்டம்

9. விழுப்புரம் - முரளி சங்கர், பி.காம்., மாநில செயலாளர், பா.ம.க. மாணவர் அணி

மேலும் செய்திகள்