< Back
நாடாளுமன்ற தேர்தல்-2024
பா.ம.க. வேட்பாளர் செளமியா அன்புமணி மீது வழக்குப்பதிவு
நாடாளுமன்ற தேர்தல்-2024

பா.ம.க. வேட்பாளர் செளமியா அன்புமணி மீது வழக்குப்பதிவு

தினத்தந்தி
|
29 March 2024 9:13 PM IST

தர்மபுரி தொகுதி பா.ம.க. வேட்பாளர் செளமியா அன்புமணி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

சென்னை,

தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தல் அடுத்த மாதம் (ஏப்ரல்) 19-ந்தேதி ஒரே கட்டமாக நடத்தப்படுகிறது. இதையொட்டி தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ள நிலையில் அனுமதியின்றி கட்சி விளம்பரங்களை சுவர்களில் வரைவது, கட்சி கொடி கம்பங்கள் நடுவது, அனுமதியின்றி ஊர்வலம் செல்வது தடை செய்யப்பட்டுள்ளது.

இந்த நிலையில், தர்மபுரி தொகுதி பா.ம.க. வேட்பாளர் செளமியா அன்புமணி உள்ளிட்ட 11 பா.ம.க.வினர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அனுமதியின்றி வேட்பாளர் அறிமுகக் கூட்டம் நடத்தியதாக மேச்சேரி காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. அதன் பேரில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்