< Back
நாடாளுமன்ற தேர்தல்-2024
பிரதமர் மோடி இன்று மும்பையில் வாகன பேரணி
நாடாளுமன்ற தேர்தல்-2024

பிரதமர் மோடி இன்று மும்பையில் வாகன பேரணி

தினத்தந்தி
|
15 May 2024 5:23 AM IST

மராட்டியத்தில் நாடாளுமன்ற தேர்தல் களம் விறுவிறுப்பை எட்டி உள்ளது.

மும்பை,

மும்பையில் உள்ள 6 தொகுதிகள் உள்பட 13 நாடாளுமன்ற தொகுதிகளுக்கு வருகிற 20-ந்தேதி வாக்குப்பதிவு நடக்கிறது. மராட்டியத்தில் இது 5-வது மற்றும் இறுதிக்கட்ட வாக்குப்பதிவு ஆகும். மாநில தலைநகரில் உள்ள தொகுதிகளில் தேர்தல் நடைபெற இருப்பதால், மராட்டியத்தில் நாடாளுமன்ற தேர்தல் களம் விறுவிறுப்பை எட்டி உள்ளது.

இந்தநிலையில் பிரதமர் மோடி இன்று (புதன்கிழமை) மாலை மும்பையில் வாகன பேரணி நடத்தி பா.ஜனதா கூட்டணி வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டுகிறார். காட்கோபர் எல்.பி.எஸ். மார்க் பகுதியில் இருந்து காந்தி நகர் வரையில் சுமார் 2.5 கி.மீ. தூரத்துக்கு பிரதமர் மோடி வாகன பேரணி நடத்துகிறார்.

முன்னதாக திண்டோரி மற்றும் கல்யாணில் நடைபெறும் பொதுக்கூட்டங்களில் பிரதமர் மோடி பங்கேற்று பேசுகிறார். இதற்கிடையே பிரதமர் மோடி நாளை மறுநாள் (வெள்ளிக்கிழமை) மும்பையில் நடைபெறும் பிரசார பொதுக்கூட்டத்தில் பங்கேற்று பேச இருப்பதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

மேலும் செய்திகள்