< Back
நாடாளுமன்ற தேர்தல்-2024
காங்கிரஸ்-தி.மு.க. கூட்டணி குறித்து பிரதமர் மோடி பேச்சு - கார்த்தி சிதம்பரம் பதிலடி
நாடாளுமன்ற தேர்தல்-2024

காங்கிரஸ்-தி.மு.க. கூட்டணி குறித்து பிரதமர் மோடி பேச்சு - கார்த்தி சிதம்பரம் பதிலடி

தினத்தந்தி
|
9 May 2024 8:36 PM IST

‘இந்தியா’ கூட்டணி வலுவாக இருக்கிறது என கார்த்தி சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

சென்னை,

சென்னை சூளைமேட்டில் காங்கிரஸ் எம்.பி. கார்த்தி சிதம்பரம் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது காங்கிரஸ் கட்சியுடனான கூட்டணியை தி.மு.க. முறித்துக்கொள்ளுமா? என பிரதமர் மோடி பேசியது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

இதற்கு பதிலளித்த கார்த்தி சிதம்பரம், "காங்கிரஸ்-தி.மு.க. கூட்டணி எதற்காக முறிய வேண்டும்? பிரதமர் மோடிக்கு ஆசை, பேராசை எல்லாம் இருக்கலாம். ஆனால் 'இந்தியா' கூட்டணி வலுவாக இருக்கிறது. தமிழ்நாட்டில் 39 தொகுதிகளிலும் தி.மு.க. தலைமையிலான 'இந்தியா' கூட்டணி வெற்றி பெறப் போகிறது" என்று தெரிவித்தார்.



மேலும் செய்திகள்