< Back
நாடாளுமன்ற தேர்தல்-2024
பிரதமரின் வெறுப்பு பேச்சு மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது - கனிமொழி
நாடாளுமன்ற தேர்தல்-2024

'பிரதமரின் வெறுப்பு பேச்சு மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது' - கனிமொழி

தினத்தந்தி
|
24 April 2024 11:00 PM IST

பிரதமர் மோடியின் வெறுப்பு பேச்சு மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளதாக கனிமொழி தெரிவித்துள்ளார்.

சென்னை,

வெறுப்பில் இருந்து இந்த நாடு பாதுகாக்கப்பட வேண்டும் என தூத்துக்குடி தொகுதி தி.மு.க. வேட்பாளர் கனிமொழி தெரிவித்தார். இது குறித்து செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது;-

"தொடர்ந்து ஒரு மதத்தைச் சார்ந்தவர்கள் மீது பிரதமர் மோடி வெறுப்பு பேச்சு பேசி வருவது, இந்திய மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. அரசியல் லாபத்திற்காக இத்தகைய காழ்ப்புணர்ச்சி அவசியமா? என்ன கேள்வியும் எழுந்துள்ளது.

இந்த வெறுப்பில் இருந்து நாடு பாதுகாக்கப்பட வேண்டும். இப்படிப்பட்ட வெறுப்பு விதைக்கப்படும்போது, மணிப்பூரைப் போல் நாடு முழுவதும் மாறிவிடக்கூடும் என்ற அச்சம் எழுகிறது."

இவ்வாறு கனிமொழி தெரிவித்தார்.

மேலும் செய்திகள்