< Back
நாடாளுமன்ற தேர்தல்-2024
மோடியின் வாக்குறுதிகளை கேரள மக்கள் நம்பமாட்டார்கள் - பினராயி விஜயன்
நாடாளுமன்ற தேர்தல்-2024

மோடியின் வாக்குறுதிகளை கேரள மக்கள் நம்பமாட்டார்கள் - பினராயி விஜயன்

தினத்தந்தி
|
17 April 2024 6:24 PM IST

மத்திய பா.ஜ.க. அரசு நாட்டில் ஆர்.எஸ்.எஸ் திட்டத்தை செயல்படுத்தி வருவதாக பினராயி விஜயன் கூறியுள்ளார்.

திருவனந்தபுரம்,

கேரளாவில் உள்ள 20 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக வருகிற 26-ந்தேதி நாடாளுமன்ற மக்களவை தேர்தல் நடைபெற உள்ளது. இதனால் அரசியல் கட்சி தலைவர்கள் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

அதன்படி, பட்டம்பியில் நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் பங்கேற்ற அம்மாநில முதல்- மந்திரி பினராயி விஜயன் பா.ஜ.க மற்றும் காங்கிரசை குற்றம்சாட்டி பேசினார்.

அப்போது அவர் கூறியதாவது:-

பிரதமர் நரேந்திர மோடி இங்கு வந்து பல வாக்குறுதிகளை அளித்தார். இதை யாராவது நம்புவார்களா? வாக்குறுதிகளை கேரள மக்கள் நம்ப மாட்டார்கள். "மக்கள் ஒரு முறை ஏமாற்றப்படலாம். ஆனால் மீண்டும் மீண்டும் ஏமாற்ற முடியாது. மத்தியில் உள்ள பா.ஜ.க. அரசு நாட்டில் ஆர்.எஸ்.எஸ் திட்டத்தை செயல்படுத்தி வருகிறது.

பா.ஜ.க. தேர்தல் அறிக்கையில் சி.ஏ.ஏ. குறித்து தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக காங்கிரஸ் மீண்டும் மவுனம் காத்து வருகிறது என்றார். பினராயி விஜயனின் கட்சியான கம்யூனிஸ்டும் மற்றும் காங்கிரசும் இந்தியா கூட்டணியில் அங்கம் வகிக்கிறது. ஆனால் கேரள மாநிலத்தில் இரு கட்சிகளும் எதிர்எதிரே களம் காண்கின்றன.

மேலும் செய்திகள்