< Back
நாடாளுமன்ற தேர்தல்-2024
சமூகத்தின் அனைத்து தரப்பு மக்களும் மோடியை ஆதரிக்கின்றனர் - பசவராஜ் பொம்மை
நாடாளுமன்ற தேர்தல்-2024

'சமூகத்தின் அனைத்து தரப்பு மக்களும் மோடியை ஆதரிக்கின்றனர்' - பசவராஜ் பொம்மை

தினத்தந்தி
|
6 May 2024 4:15 AM IST

சமூகத்தின் அனைத்து தரப்பு மக்களும் பிரதமர் மோடிக்கு ஆதரவு தெரிவிப்பதாக பசவராஜ் பொம்மை தெரிவித்துள்ளார்.

பெங்களூரு,

பிரதமர் மோடியின் 10 ஆண்டுகால ஆட்சியை கருத்தில் கொண்டு சமூகத்தின் அனைத்து தரப்பு மக்களும் அவருக்கு ஆதரவு தெரிவிப்பதாக கர்நாடக மாநிலத்தின் முன்னாள் முதல்-மந்திரியும், கடக்-ஹாவேரி தொகுதி பா.ஜ.க. வேட்பாளருமான பசவராஜ் பொம்மை தெரிவித்துள்ளார். இது தொடர்பாக ஹாவேரியில் நடைபெற்ற பிரசார பொதுக்கூட்டத்தில் அவர் பேசியதாவது;-

"தற்போது நடைபெறும் தேர்தலின் முக்கியத்துவம் குறித்து வாக்காளர்கள் நன்றாக புரிந்து வைத்துள்ளனர். திறமையாக ஆட்சி செய்யக்கூடிய தலைவர்களிடம் நாட்டை ஒப்படைக்க வேண்டும் அவர்கள் முடிவு செய்துள்ளனர். பிரதமர் மோடியின் 10 ஆண்டுகால ஆட்சியை கருத்தில் கொண்டு சமூகத்தின் அனைத்து தரப்பு மக்களும் அவருக்கு ஆதரவு தெரிவிக்கின்றனர்."

இவ்வாறு பசவராஜ் பொம்மை தெரிவித்தார்.

மேலும் செய்திகள்