< Back
நாடாளுமன்ற தேர்தல்-2024
நாடாளுமன்ற தேர்தல்-2024
'கடந்த தேர்தலைவிட இந்த தேர்தலில் மக்கள் மிக தெளிவாக உள்ளனர்' - நடிகர் வடிவேலு
|19 April 2024 10:19 PM IST
கடந்த தேர்தலைவிட இந்த முறை நடைபெறும் தேர்தலில் மக்கள் மிக தெளிவாக உள்ளனர் என நடிகர் வடிவேலு தெரிவித்தார்.
சென்னை,
தமிழகத்தில் விறுவிறுப்பாக நடைபெற்ற நாடாளுமன்ற மக்களவை தேர்தல் வாக்குப்பதிவு மாலை 6 மணிக்கு நிறைவடைந்தது. இதில் பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்கள், திரைப் பிரபலங்கள் உள்ளிட்ட பலரும் வாக்குச்சாவடியில் வரிசையில் நின்று தங்கள் ஜனநாயக கடமையை நிறைவேற்றினர்.
அந்த வகையில், சென்னை சாலிகிராமத்தில் உள்ள வாக்குச்சாவடியில் நடிகர் வடிவேலு தனது வாக்கினை செலுத்தினார். இதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "கடந்த தேர்தலைவிட இந்த தேர்தலில் மக்கள் மிக தெளிவாக உள்ளனர். நமது கருத்தை வாக்கு செலுத்திதான் தெரிவிக்க முடியும். நல்ல கட்சிக்கு நிச்சயம் வாக்கு கிடைக்கும்" என்று தெரிவித்தார்.