< Back
நாடாளுமன்ற தேர்தல்-2024
ஆந்திரா: அரசியலில் முதல் வெற்றியை பதிவு செய்த பவன் கல்யாண்
நாடாளுமன்ற தேர்தல்-2024

ஆந்திரா: அரசியலில் முதல் வெற்றியை பதிவு செய்த பவன் கல்யாண்

தினத்தந்தி
|
4 Jun 2024 4:21 PM IST

ஆந்திராவில் உள்ள பிதாபுரம் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்ட பவன் கல்யாண் வெற்றி பெற்றுள்ளார்.

திருப்பதி,

ஜனசேனா கட்சியின் தலைவரும், நடிகருமான பவன்கல்யாண், இம்முறை தெலுங்கு தேசம், பா.ஜ.க.வுடன் கூட்டணி அமைத்து தேர்தலை சந்தித்தார்.

பவன் கல்யாண், ஆந்திராவில் உள்ள பிதாபுரம் சட்டமன்றத் தொகுதியில் வலுவான முன்னிலையுடன் தனது முதல் தேர்தல் வெற்றியை பதிவு செய்தார்.

பவன் கல்யாண் 1,34,394 வாக்குகள் பெற்றுள்ளார். பவன் கல்யாணை எதிர்த்து ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியின் கீதா விஸ்வநாத் போட்டியிட்டார். இவர் பெற்றுள்ள வாக்குகள் 6,41,15. இதன்மூலம் 70,279 வாக்குகள் வித்தியாசத்தில் அரசியலில் முதல் வெற்றியை பதிவு செய்துள்ளார் பவன் கல்யாண்.

மேலும் செய்திகள்