நாடாளுமன்ற தேர்தல்: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வாக்களித்தார்
|முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது வாக்கினை பதிவு செய்தார்.
சென்னை,
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளில் நாடாளுமன்ற தேர்தலுக்கான முதற்கட்ட வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது. காலையில் இருந்தே மக்கள் தங்களது ஜனநாயக கடமையை ஆற்றி வருகின்றனர். பதற்றமான வாக்குச்சாவடிகளில் 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
இந்த நிலையில், சென்னை தேனாம்பேட்டை எஸ்.ஐ.இ.டி. கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடியில் திமுக தலைவரும், முதல்-அமைச்சருமான மு.க.ஸ்டாலின் மக்களோடு மக்களாக வரிசையில் நின்று தனது வாக்கினை பதிவு செய்தார். அவருடன் அவரது மனைவி துர்கா ஸ்டாலினும் வாக்களித்தார்.
வாக்களித்தபின் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-
மக்கள் அனைவரும் தங்கள் ஜனநாயக கடமையை ஆற்ற வேண்டும். வாக்குரிமை பெற்றிருக்கும் அனைவரும் மறந்திடாமல், புறக்கணிக்காமல் வாக்கு செலுத்த வேண்டும். நீங்கள் நினைப்பதுபோல இந்தியாவுக்கே வெற்றிதான். இவ்வாறு அவர் கூறினார்.