< Back
நாடாளுமன்ற தேர்தல்-2024
நாடாளுமன்ற தேர்தல்: தமிழகத்தில் 29-ந்தேதி முதல் அண்ணாமலை பிரசாரம்
நாடாளுமன்ற தேர்தல்-2024

நாடாளுமன்ற தேர்தல்: தமிழகத்தில் 29-ந்தேதி முதல் அண்ணாமலை பிரசாரம்

தினத்தந்தி
|
26 March 2024 11:44 AM IST

பா.ஜனதா மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து அண்ணாமலை 29-ந்தேதி முதல் பிரசாரம் மேற்கொள்கிறார்.

சென்னை,

தமிழக பா.ஜனதா மாநில தலைவர் அண்ணாமலை கோவை நாடாளுமன்ற தொகுதி வேட்பாளராக களம் இறங்கினாலும், தமிழகம் முழுவதும் பா.ஜனதா மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து சூறாவளி தேர்தல் பிரசார சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். அவருடைய பிரசார பயண விவரம் வருமாறு:-

29-ந்தேதி- ஸ்ரீபெரும்புதூர், திருவள்ளூர், வடசென்னை, மத்தியசென்னை, தென்சென்னை, 30-ந்தேதி- சிதம்பரம், நாகை, தஞ்சை, பெரம்பலூர், திருச்சி, 31-ந்தேதி- கரூரில் பிரசாரம் செய்கிறார்.

மேலும் 31-ந்தேதி முதல் ஏப்ரல் 3-ந்தேதி வரையில் தான் போட்டியிடும் கோவை தொகுதியில் வாக்குசேகரிப்பில் ஈடுபடுகிறார். 4-ந்தேதி- கன்னியாகுமரி, நெல்லை, தென்காசி, விருதுநகர், 5-ந்தேதி- ராமநாதபுரம், சிவகங்கை, மதுரை, தேனி ஆகிய தொகுதிகளில் பிரசாரம் மேற்கொள்கிறார்.

6-ந்தேதி முதல் 8-ந்தேதி வரையில் மீண்டும் கோவையில் வாக்கு சேகரிக்கிறார். 9-ந்தேதி- கிருஷ்ணகிரி, தர்மபுரி, வேலூர், திருவண்ணாமலை, 10-ந்தேதி நாமக்கல், திருப்பூர், பொள்ளாச்சி, 11-ந்தேதி கோவை, 12-ந்தேதி- கோவை, நீலகிரியில் பிரசாரத்தில் ஈடுபடுகிறார். அதன்பின்னர் பிரசாரம் முடிவடையும் வரையில் கோவையிலே முகாமிட்டு தீவிர பிரசாரத்தில் ஈடுபட உள்ளார்.

மேலும் செய்திகள்