< Back
நாடாளுமன்ற தேர்தல்-2024
நாடாளுமன்ற தேர்தல்: நடிகர் ரஜினிகாந்த் வாக்களித்தார்
நாடாளுமன்ற தேர்தல்-2024

நாடாளுமன்ற தேர்தல்: நடிகர் ரஜினிகாந்த் வாக்களித்தார்

தினத்தந்தி
|
19 April 2024 8:15 AM IST

நடிகர் ரஜினிகாந்த் தனது வாக்கினை பதிவு செய்தார்.

சென்னை,

அடுத்த 5 ஆண்டுகள் நம்மை ஆளப்போவது யார் என்பதை தீர்மானிக்கும்18-வது நாடாளுமன்ற தேர்தல் இன்று (வெள்ளிக்கிழமை) தொடங்கி ஜூன் மாதம் 1-ந்தேதி வரை 7 கட்டங்களாக நடைபெறுகிறது.

இதில் தமிழகம், புதுச்சேரி உள்பட 21 மாநிலங்களில் 102 தொகுதிகளில் முதல் கட்ட தேர்தல் இன்று நடக்கிறது. இந்நிலையில், தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளில் நாடாளுமன்ற தேர்தலுக்கான முதற்கட்ட வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது. காலையில் இருந்தே மக்கள் தங்களது ஜனநாயக கடமையை ஆற்றி வருகின்றனர். பதற்றமான வாக்குச்சாவடிகளில் 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

இந்நிலையில், சென்னை ஸ்டெல்லா மேரீஸ் கல்லூரியில் உள்ள வாக்குச்சாவடி மையத்தில் நடிகர் ரஜினிகாந்த் தனது வாக்கினை செலுத்தினார். முன்னதாக இங்குள்ள வாக்கு இயந்திரங்களில் கோளாறு ஏற்பட்டது. இதனால் மக்கள் காத்திருந்தனர். பின்னர் கோளாறு சரிசெய்யப்பட்டு மக்கள் வாக்கினை செலுத்தி வருகின்றன.

மேலும் செய்திகள்