< Back
நாடாளுமன்ற தேர்தல்-2024
நாடாளுமன்ற தேர்தல்: தமிழ்நாடு முழுவதும் 1,085 வேட்புமனுக்கள் ஏற்பு

கோப்புப்படம் 

நாடாளுமன்ற தேர்தல்-2024

நாடாளுமன்ற தேர்தல்: தமிழ்நாடு முழுவதும் 1,085 வேட்புமனுக்கள் ஏற்பு

தினத்தந்தி
|
28 March 2024 10:10 PM IST

தேர்தல் நெருங்கிவரும் நிலையில் கடந்த 20-ம் தேதி வேட்புமனு தாக்கல் தொடங்கி நேற்று நிறைவடைந்தது.

சென்னை,

தமிழ்நாட்டில் 39 தொகுதிகளிலும் ஏப்ரல் 19-ம் தேதி ஒரேகட்டமாக நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலில் பதிவாகும் வாக்குகள் ஜூன் 4-ம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. தேர்தல் நெருங்கிவரும் நிலையில் கடந்த 20-ம் தேதி வேட்புமனு தாக்கல் தொடங்கி நேற்று நிறைவடைந்தது.

வேட்புமனுக்களை தேர்தல் ஆணைய அதிகாரிகள் இன்று பரிசீலனை செய்தனர். இந்த நிலையில் தமிழ்நாடு முழுவதும் 39 நாடாளுமன்ற தொகுதிகளில் 1,749 வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்ட நிலையில், 664 வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன. 39 நாடாளுமன்ற தொகுதிகளில் மொத்தம் 1,085 வேட்புமனுக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளன.

மேலும் செய்திகள்