< Back
நாடாளுமன்ற தேர்தல்-2024
நாடாளுமன்ற தேர்தல்-2024
நாடாளுமன்ற தேர்தல் அறிவிப்பு எதிரொலி: யு.பி.எஸ்.சி. முதன்மை தேர்வு ஒத்திவைப்பு
|19 March 2024 10:26 PM IST
யு.பி.எஸ்.சி. சிவில் சர்வீசஸ் முதன்மை தேர்வு மே 26-ம் தேதி நடத்திட திட்டமிடப்பட்டு இருந்தது
புதுடெல்லி,
நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் ஏப்ரல் 19-ந் தேதி தொடங்கி ஜூன் 1-ந்தேதி வரை 7 கட்டங்களாக நடத்தப்பட உள்ளது. தேர்தலில் பதிவான வாக்குகள் ஜூன் 4ம் தேதி எண்ணப்பட உள்ளன.
இதற்கிடையே, நடப்பாண்டின் யு.பி.எஸ்.சி. சிவில் சர்வீசஸ் முதன்மை தேர்வு மே 26ம் தேதி நாடு முழுவதும் நடத்திட திட்டமிடப்பட்டு இருந்தது.இந்நிலையில், நாடாளுமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் சிவில் சர்வீசஸ் முதன்மை தேர்வு ஜூன் 16ம் தேதி நடத்தப்படும் என யு.பி.எஸ்.சி.தெரிவித்துள்ளது.