< Back
நாடாளுமன்ற தேர்தல்-2024
ஒடிசா சட்டசபை தேர்தல்: வேட்புமனு தாக்கல் செய்தார் முதல்-மந்திரி நவீன் பட்நாயக்
நாடாளுமன்ற தேர்தல்-2024

ஒடிசா சட்டசபை தேர்தல்: வேட்புமனு தாக்கல் செய்தார் முதல்-மந்திரி நவீன் பட்நாயக்

தினத்தந்தி
|
30 April 2024 2:58 PM IST

நவீன் பட்நாயக் ஒடிசாவில் ஹிஞ்சிலி தொகுதியிலும், கன்டாபஞ்சி தொகுதியிலும் போட்டியிடுகிறார்.

புவனேஸ்வர்,

நாடு முழுவதும் நாடாளுமன்ற தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற்று வருகிறது. முதற்கட்ட தேர்தல் கடந்த 19ம் தேதியும். 2ம் கட்ட தேர்தல் கடந்த 26ம் தேதியும் நடைபெற்றது. இதையடுத்து வரும் 7, 13, 20,25 ஆகிய தேதிகளில் அடுத்தடுத்த கட்ட தேர்தல் நடைபெற உள்ளது. ஜூன் 1ம் தேதி கடைசி கட்டமான 7ம் கட்ட தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலில் பதிவாகும் வாக்குகள் ஜூன் 4ம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.

ஒடிசா மாநிலத்தில், நாடாளுமன்ற தேர்தலுடன் சட்டசபை தேர்தலும் நடைபெற உள்ளது. இதையடுத்து, ஒடிசாவில் 5ம் கட்ட தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் கடந்த 26ம் தேதி தொடங்கியது. பல அரசியல் கட்சியின் வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்து வருகின்றனர்.

இந்நிலையில், ஒடிசா மாநிலம் ஹிஞ்சிலி சட்டசபை தொகுதியில் பிஜு ஜனதாதளம் கட்சி சார்பில் போட்டியிடும் அக்கட்சியின் தலைவரும், அம்மாநில முதல்-மாந்திரியுமான நவீன் பட்நாயக் இன்று வேட்புமனு தாக்கல் செய்தார்.

ஒடிசாவில் நவீன் பட்நாயக் ஹிஞ்சிலி, கன்டாபஞ்சி ஆகிய 2 தொகுதிகளில் களம் காண்கிறார். கடந்த 2019-ம் ஆண்டு சட்டசபை தேர்தலிலும் நவீன் பட்நாயக் 2 தொகுதிகளில் போட்டியிட்டு வெற்றி பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்