< Back
நாடாளுமன்ற தேர்தல்-2024
பக்கெட் சின்னம் வழங்க கோரி தேர்தல் ஆணையத்தில் ஓ.பன்னீர்செல்வம் மனு
நாடாளுமன்ற தேர்தல்-2024

'பக்கெட்' சின்னம் வழங்க கோரி தேர்தல் ஆணையத்தில் ஓ.பன்னீர்செல்வம் மனு

தினத்தந்தி
|
26 March 2024 5:47 PM IST

ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் புகழேந்தி, தேர்தல் ஆணையத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார்.

ராமநாதபுரம்,

நாடாளுமன்ற தேர்தலில் தேசிய ஜனநாயகக்கூட்டணியில் அங்கும் வகிக்கும் முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு ராமநாதபுரம் தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த தொகுதியில் சுயேட்சை வேட்பாளராக ஓ.பன்னீர்செல்வம் போட்டியிடுகிறார். இதையடுத்து ஓ.பன்னீர்செல்வம் ராமநாதபுரம் கலெக்டர் அலுவலகத்தில் வேட்பு மனுத் தாக்கல் செய்தார்.

ராமநாதபுரம் நாடாளுமன்ற தொகுதியில் இந்தியா கூட்டணி சார்பில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி வேட்பாளர் நவாஸ் கனி, அ.தி.மு.க. சார்பில் ஜெயபெருமாள் ஆகியோர் போட்டியிடுகின்றனர்.

இந்த நிலையில், ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் புகழேந்தி, தேர்தல் ஆணையத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். அதில், "எடப்பாடி பழனிசாமிக்கு இரட்டை இலை சின்னம் கொடுக்கக்கூடாது. இரட்டை இலை சின்னத்தை தனது அணிக்கு தர வேண்டும். இல்லை என்றால் இரட்டை இலை சின்னத்தை முடக்குங்கள். சின்னத்தை முடக்கும் பட்சத்தில், தனக்கு 'பக்கெட்' சின்னம் வழங்க வேண்டும்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஓ.பன்னீர்செல்வம் போட்டியிடும் ராமநாதபுரம் தொகுதியில், அதே பெயரில் மேலும் 4 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்