< Back
நாடாளுமன்ற தேர்தல்-2024
ராமநாதபுரம் தொகுதியில் ஓ.பன்னீர்செல்வம் பின்னடைவு
நாடாளுமன்ற தேர்தல்-2024

ராமநாதபுரம் தொகுதியில் ஓ.பன்னீர்செல்வம் பின்னடைவு

தினத்தந்தி
|
4 Jun 2024 2:51 PM IST

ராமநாதபுரம் தொகுதியில் ஓ.பன்னீர்செல்வம் பின்னடைவை சந்தித்துள்ளார்.

சென்னை,

தமிழ்நாட்டில் 39 தொகுதிகள் மற்றும் புதுச்சேரியில் ஒரு தொகுதி என 40 தொகுதிகளில் கடந்த ஏப்ரல் 19-ந் தேதி ஒரே கட்டமாக நாடாளுமன்ற தேர்தல் நடைபெற்றது. இதில் தி.மு.க., அ.தி.மு.க., பா.ஜ.க. ஆகிய கட்சிகள் கூட்டணியிட்டும், நாம் தமிழர் கட்சி தனித்தும் களம் கண்டது. இந்த தேர்தலில் பதிவான வாக்குகள் காலை 8 மணியில் இருந்து எண்ணப்பட்டு வருகின்றன.

ராமநாதபுரம் தொகுதியில் ஓ.பன்னீர்செல்வம் பெயரில் 5 பேர் போட்டியிட்டனர். பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் சுயேச்சையாக போட்டியிட்டார். மதுரை மாவட்டம் மேக்கிலார்பட்டியைச் சேர்ந்த ஒச்சப்பன் மகன் பன்னீர்செல்வம், ராமநாதபுரம் மாவட்டம் வாலாந்தரவை அருகே தெற்கு காட்டூரைச் சேர்ந்த ஒய்யாரம் மகன் பன்னீர்செல்வம், மதுரை மாவட்டம் திருமங்கலம் தாலுகா வாகைக்குளத்தைச் சேர்ந்த ஒச்சாத்தேவர் மகன் பன்னீர்செல்வம், மதுரை சோலை அழகுபுரத்தைச் சேர்ந்த ஒய்யாத்தேவர் மகன் பன்னீர்செல்வம் உட்பட ஓ.பன்னீர்செல்வம் என்ற பெயரில் 5 பேர் களம் கண்டனர்.

இந்த நிலையில், தற்போதைய நிலவரப்படி, ராமநாதபுரம் தொகுதியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் வேட்பாளர் நவாஸ் கனி 2,06,062 வாக்குகள் பெற்று முன்னிலையில் உள்ளார். பாஜக கூட்டணி சார்பில் போட்டியிட்ட ஓ.பன்னீர்செல்வம் 1,27,443 வாக்குகள் பெற்று 2-ம் இடத்தில் உள்ளார்.

அதிமுக வேட்பாளர் ஜெயபெருமாள் 43,448 வாக்குகள் பெற்றுள்ளார்.

நாம் தமிழர் கட்சி வேட்பாளர் சந்திர பிரபா ஜெயபால் 37,263 வாக்குகள் பெற்றுள்ளார்.

மேலும் செய்திகள்