< Back
நாடாளுமன்ற தேர்தல்-2024
26 ஆயிரம் ஆசிரியர்கள் பணி நீக்கம் விவகாரம்: பெரும் அநீதி - மம்தா பானர்ஜி கடும் தாக்கு
நாடாளுமன்ற தேர்தல்-2024

26 ஆயிரம் ஆசிரியர்கள் பணி நீக்கம் விவகாரம்: பெரும் அநீதி - மம்தா பானர்ஜி கடும் தாக்கு

தினத்தந்தி
|
25 April 2024 4:47 PM IST

ஆசிரியர்கள் பணி நீக்கம் செய்யப்பட்ட விவகாரத்தில் சுப்ரீம் கோர்ட்டில் இருந்து நீதி கிடைக்கும் என நம்புகிறேன் என்று மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.

கொல்கத்தா,

பா.ஜ.க., மார்க்சிஸ்ட் மற்றும் காங்கிரசுக்கு ஒரு ஓட்டு கூட போட வேண்டாம் என அரசு ஊழியர்களுக்கு மேற்கு வங்காள முதல்-மந்திரி மம்தா பானர்ஜி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இது குறித்து மம்தா பானர்ஜி கூறியிருப்பதாவது:

"26 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டது மிக பெரும் அநீதி. பா.ஜ.க., மார்க்சிஸ்ட், காங்கிரஸ் ஆகிய கட்சிகளுக்கு ஒரு ஓட்டு கூட எந்த அரசு ஊழியர்களும் போட வேண்டாம். பா.ஜ.க. நீதிமன்றத்தை விலைக்கு வாங்கியுள்ளது. சுப்ரீம் கோர்ட்டை அல்ல, ஐகோர்ட்டை விலைக்கு வாங்கியுள்ளது.

ஆசிரியர்கள் பணி நீக்கம் செய்யப்பட்ட விவகாரத்தில், சுப்ரீம் கோர்ட்டில் இருந்து நீதி கிடைக்கும் என்று நான் இன்னும் நம்புகிறேன். சி.பி.ஐ., என்.ஐ.ஏ., மற்றும் பி.எஸ்.எப்., மற்றும் சி.ஏ.பி.எப் உள்ளிட்டவற்றை பா.ஜ.க. விலைக்கு வாங்கியுள்ளது. தூர்தர்ஷனின் நிறத்தை காவி நிறமாக்கி விட்டார்கள். அதில் பா.ஜ.க., மோடியை பற்றி மட்டுமே பேசுவார்கள். அதை பார்க்காமல் மக்கள் புறக்கணிக்க வேண்டும்." இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்