< Back
நாடாளுமன்ற தேர்தல்-2024
கூட்டணிக்குப் பணியாத கட்சிகளுக்கு ஊழல் முத்திரை: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு

கோப்புப்படம்

நாடாளுமன்ற தேர்தல்-2024

கூட்டணிக்குப் பணியாத கட்சிகளுக்கு ஊழல் முத்திரை: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு

தினத்தந்தி
|
16 April 2024 11:15 PM IST

தமிழ்நாட்டை வஞ்சித்தவர்களை ஒருசேர வீழ்த்துவோம் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

சென்னை,

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் வலைதளத்தில் கூறியிருப்பதாவது:-

மாநில முதல்-அமைச்சராக இருந்த தனக்குத்தான் மாநிலங்களின் பிரச்சினைகளும் தெரியும்; தேசிய பிரச்சினைகளும் தெரியும் என்று பிரதமர் மோடி பேசினார்.

ஆனால் நடந்தது என்ன?

பிரதமரானதும் மாநிலங்களின் நிதியைக் கூட நிறுத்த முயற்சித்தார் என்று நிதி ஆயோக் தலைமை அதிகாரி குற்றம்சாட்டினார்.

பெரும்பாலான அதிகாரங்களை மத்தியில் குவித்து, மாநிலங்களை முனிசிபாலிட்டிகளாக மாற்றப் பார்க்கிறார்.

டெல்லி சர்வீசஸ் சட்டம் (GNCTD) போன்றவற்றைக் கொண்டுவந்து, அதிகாரங்களைத் துணைநிலை கவர்னருக்கு மாற்றினார்.

கூட்டணிக்குப் பணியாத கட்சிகளுக்கு ஊழல் முத்திரை; ED - IT - CBI ரெய்டு, சிறை என மாநிலங்களைச் சுருக்கப் பார்க்கும் பிரதமர் மோடியை எதிர்க்காமல் 'B-Team' நாடகமாடுகிறார் பழனிசாமி!

அ.தி.மு.க.வுக்கு அளிக்கும் வாக்கு என்பதும் பா.ஜ.க.வுக்கான வாக்கு என்பதால், தமிழ்நாட்டை வஞ்சித்த இவர்களை ஒருசேர வீழ்த்துவோம்!

இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.




மேலும் செய்திகள்