< Back
நாடாளுமன்ற தேர்தல்-2024
ராமநாதபுரம் தொகுதியில் 5 பன்னீர்செல்வங்களின் வேட்புமனுக்களும் ஏற்பு
நாடாளுமன்ற தேர்தல்-2024

ராமநாதபுரம் தொகுதியில் 5 பன்னீர்செல்வங்களின் வேட்புமனுக்களும் ஏற்பு

தினத்தந்தி
|
28 March 2024 1:52 PM IST

ராமநாதபுரம் மக்களவை தொகுதியில் முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் போட்டியிடுகிறார்.

ராமநாதபுரம்,

நாடாளுமன்ற தேர்தல் 7 கட்டங்களாக நடைபெறும் நிலையில், தமிழகத்தில் 39 தொகுதிகள் உட்பட நாடு முழுவதும் 102 தொகுதிகளில் முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தேர்தல் நடைபெறுகிறது.

தேர்தலில் போட்டியிடுவதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 20-ந் தேதி தொடங்கியது. கட்சி வேட்பாளர்களும், சுயேச்சைகளும் போட்டிப்போட்டுக்கொண்டு தங்களது மனுக்களை தேர்தல் அலுவலகங்களில் தாக்கல் செய்தனர்.

நாடாளுமன்ற தேர்தலில் தேசிய ஜனநாயகக்கூட்டணியில் அங்கம் வகிக்கும் முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், ராமநாதபுரம் தொகுதியில் சுயேட்சை வேட்பாளராக போட்டியிடுகிறார்.

இதற்கிடையில், ராமநாதபுரம் தொகுதியில் பன்னீர்செல்வம் பெயரில் மேலும் 4 பேர் வேட்புமனு தாக்கல் செய்தனர். தனக்கு எதிராகவும், வாக்காளர்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தவும் இதுபோன்று செயல்படுவதாக முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தரப்பு குற்றம் சாட்டியது.

இந்த சூழலில், தாக்கல் செய்யப்பட்ட வேட்புமனுக்கள் மீது பரிசீலனை இன்று நடைபெற்று வருகிறது. இதில், ராமநாதபுரம் தொகுதியில் தாக்கல் செய்த 5 பன்னீர்செல்வங்களின் வேட்புமனுக்களும் ஏற்கப்பட்டு உள்ளது.

மேலும் செய்திகள்