< Back
நாடாளுமன்ற தேர்தல்-2024
நெல்லை பா.ஜ.க. வேட்பாளர் நயினார் நாகேந்திரன் காரில் பறக்கும் படை அதிகாரிகள் சோதனை
நாடாளுமன்ற தேர்தல்-2024

நெல்லை பா.ஜ.க. வேட்பாளர் நயினார் நாகேந்திரன் காரில் பறக்கும் படை அதிகாரிகள் சோதனை

தினத்தந்தி
|
9 April 2024 2:43 PM IST

நயினார் நாகேந்திரனின் பிரசார வாகனம் மற்றும் காரில் பறக்கும் படை அதிகாரிகள் சோதனை செய்தனர்.

நெல்லை,

நெல்லை பா.ஜ.க. வேட்பாளர் நயினார் நாகேந்திரன், நெல்லையின் பல்வேறு பகுதிகளில் பிரசாரம் மேற்கொண்டு வருகிறார். இன்று கடையம் மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் அவர் பிரசாரம் செய்தார். இதனை தொடர்ந்து ஆலங்குளத்தில் பிரசாரம் செய்வதற்காக தனது காரில் சென்றுகொண்டிருந்தார்.

அப்போது அம்பை அருகே இடைக்கால் பகுதியில் சோதனை செய்துகொண்டிருந்த பறக்கும்படை அதிகாரிகள், திடீரென நயினார் நாகேந்திரனின் காரை நிறுத்தினர். பின்னர் அவரது கார் மற்றும் பிரசார வாகனத்தில் அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது ஆலங்குளம் எம்.எல்.ஏ., மனோஜ் பாண்டியனும் உடன் இருந்தார். இந்த சோதனையால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

கடந்த சில தினங்களுக்கு முன்பு நெல்லை நோக்கி சென்றுகொண்டிருந்த நெல்லை எக்ஸ்பிரஸ் ரெயிலில் ரூ.4 கோடி பணம் சிக்கியிருந்த நிலையில், அந்த பணத்தில் நயினார் நாகேந்திரனுக்கும் தொடர்பு இருப்பதாக தகவல் வெளியானது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்