< Back
நாடாளுமன்ற தேர்தல்-2024
கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் நாமக்கல் தொகுதி வேட்பாளர் திடீர் மாற்றம்
நாடாளுமன்ற தேர்தல்-2024

கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் நாமக்கல் தொகுதி வேட்பாளர் திடீர் மாற்றம்

தினத்தந்தி
|
22 March 2024 6:27 AM IST

சூரியமூர்த்திக்கு பதிலாக மாதேஷ்வரன் என்பவர் கொ.ம.தே.க. சார்பில் நாமக்கல் தொகுதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.

நாமக்கல்,

நாடாளுமன்ற மக்களவை தேர்தலில் தி.மு.க. கூட்டணியில் இடம்பெற்றுள்ள கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சி, உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுகிறது. இந்த கட்சியின் சார்பில் நாமக்கல் தொகுதி வேட்பாளராக சூரியமூர்த்தி அறிவிக்கப்பட்டிருந்தார்.

இந்நிலையில் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி ஆட்சி மன்ற கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின் அடிப்படையில், நாமக்கல் தொகுதி வேட்பாளர் மாற்றம் செய்யப்பட்டுள்ளார். அதன்படி சூரியமூர்த்திக்கு பதிலாக மாதேஷ்வரன் என்பவர் கொ.ம.தே.க. சார்பில் நாமக்கல் தொகுதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். அண்மையில் சூரியமூர்த்தி மீது சாதி ரீதியான விமர்சனம் எழுந்த நிலையில், தற்போது வேட்பாளர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.



மேலும் செய்திகள்