< Back
நாடாளுமன்ற தேர்தல்-2024
நாடாளுமன்ற தேர்தல்-2024
உலக அளவில் இந்தியாவின் அந்தஸ்தை உயர்த்தியதில் மோடி முக்கிய பங்காற்றியுள்ளார்; உத்தரகாண்ட் முதல்-மந்திரி பேச்சு
|19 May 2024 10:09 PM IST
உலக அளவில் இந்தியாவின் அந்தஸ்தை உயர்த்தியதில் பிரதமர் மோடி முக்கிய பங்காற்றியுள்ளார் என உத்தரகாண்ட் முதல்-மந்திரி புஷ்கர் சிங் தாமி தெரிவித்துள்ளார்.
புதுடெல்லி,
டெல்லி சாந்தினி சவுக் பகுதியில் நடைபெற்ற பா.ஜ.க. தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் உத்தரகாண்ட் முதல்-மந்திரி புஷ்கர் சிங் தாமி கலந்து கொண்டு வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது அவர் பேசியதாவது;-
"நாட்டில் தற்போது ஒரே ஒரு அலை மட்டுமே இருக்கிறது. அது மோடிக்கும், பா.ஜ.க.வுக்கும் சாதகமாக இருக்கிறது. பா.ஜ.க.வுக்காக வேலை செய்வதற்கு நாம் பெருமைப்பட வேண்டும். முன்னாள் பிரதமர் வாஜ்பாய் ஆட்சிக்காலத்தில் தொடங்கப்பட்ட பல்வேறு திட்டங்கள் காங்கிரஸ் அரசால் நிறுத்தி வைக்கப்பட்டன.
காங்கிரஸ் அரசு ஊழலில் திளைத்திருந்தது. ஆனால் இன்று, உலக அளவில் இந்தியாவின் மதிப்பு உயர்ந்துள்ளது. இதற்கு பிரதமர் மோடி முக்கிய பங்காற்றியுள்ளார்."
இவ்வாறு புஷ்கர் சிங் தாமி தெரிவித்தார்.